உமது தன்னம்பிக்கையே நூறு ஆண்டுக்காலம் வாழவைக்கும்.

கோலாலம்பூர் டிச 16-
உமது தன்னம்பிக்கையே நூறு ஆண்டுக்காலத்திற்கு உம்மை வாழவைத்து பெருமைப்படும் தலைவனாக நீங்கள் திகழவேண்டும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அவர்களே.

இந்திய மாணவர்களின் கல்விக்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என அவர்கள்மேல் நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையால் சரஸ்வதி தேவியின் கடாட்சமும்,இந்தியச் சமுதாயம் எந்த விதத்திலும் இந்த நாட்டில் ஏமாந்துவிடகூடாது என நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையால் துர்க்கையின் அருளும்,பொருளாதராம் ஒன்றே இந்தச் சமுதாயத்தை தலைநிமிர்த்தும் என அதற்காக நீங்கள் வகுத்து வரும் பொருளாதார திட்டங்களில் பெருமைக் கொண்டு மகாலெட்சுமியின் அம்சமும் உம்மை நீடூழி வாழ்வாங்கு வாழவைத்து பல அரிய சாதனைகளை படைத்து இந்த சமுதாயத்தை இந்த நாட்டில் உம்மால் மட்டுமே பெருமைப் படுத்தி வழி நடத்த முடியும்.

உம்மை நம்பியே இந்த நாட்டு இந்திய மக்களின் வாழ்வாதாரம் சார்ந்திருக்கிறது.

அவர்களுக்காக ஆலமரமாக வளர்ந்திருக்கும் மஇகா கட்சியில் சாதனைத் தலைவனாக உமது சேவைகள் தொடர்ந்து கொண்டிருப்பது பெருமையே.
இன்று உமது பிறந்த நாள்.

நீங்கள் இன்னும் நீடூழி நூறு ஆண்டுக்காலம் வாழவேண்டும் என இறைவனை வேண்டி எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் டான்ஶ்ரீ.

இவ்வண்ணம்
செபூத்தே எஸ். எஸ் இராமமூர்த்தி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles