டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் ம இகா எழுச்சி பாதையில் பயணிக்கிறது!டத்தோ தேவசகாயம் பெருமிதம்

கோலாலம்பூர் டிச 16-
இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு பண்டார்
துன் ரசாக் ம.இகா கிளைத் தலைவர் மற்றும் விலாயா மாநில ம இகா நிர்வாக குழு உறுப்பினர் டத்தோ தேவசகாயம் மற்றும் புக்கிட் அங்கீரிங் ம இகா கிளைத் தலைவர் கந்தன் ஆகியோர் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ம இகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில்
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு இருவரும் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இன்று ம இகா மாபெரும் எழுச்சி பாதையில் பயணிப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக டத்தோ தேவசகாயம் தெரிவித்தார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பக்கப்பலமாக தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் உட்பட நாடு தழுவிய அளவில் ம இகா கிளைத் தலைவர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்திய மாணவர்களின் கல்விக்கு ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறார்.

இன்று இந்திய சமுதாயத்தின் ஆதரவு மீண்டும் ம இகா பக்கம் திரும்பி இருப்பதும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles