கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளி விவகாரம்!மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்!சிலாங்கூர் மாநில ம இகா செயலாளர் சசிதரன் விளக்கம்

கிள்ளான், டிச 17-
அண்மையில் கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் கூரைகள் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூரைகள் சரிந்து விழுந்த விவகாரத்தில் அரசியல் செய்ய ஒன்றுமில்லை. மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று
சிலாங்கூர் மாநில மஇகா தலைமை செயலாளர் எம். சசிதரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை அண்மையில் சரிந்து விழுந்தது.

தகவல் கிடைத்ததும் சிலாங்கூர் மாநில மஇகாவினர் அப்பள்ளிக்கு சென்று
கூரை சரிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டதுடன் பள்ளியின் மற்ற கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குத்தகையாளரையும் மஇகா நியமித்ததது.

அதே வேளை இப்பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வியமைச்சையும் பொதுப்பணி அமைச்சையும் மஇகா கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தில் மஇகா யாரையும் குற்றம் சாட்டவில்லை. மாணவர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தும் என்றார் அவர்.

ஆனால் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், எங்களுக்கு எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள் என்று சாடியுள்ளார்.

எங்களுக்கு பதில் சொல்வதை விட அவர் நேரடியாக அப்பள்ளிக்கு சென்று உண்மை நிலவரத்தை பார்ப்பதுடன் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நாங்கள் இந்தப் பள்ளி விவரத்தில் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles