பத்துகாவான் நாடாளுமன்ற தொகுதி ஜசெக உறுப்பினர்களுடன்பினாங்கு ஜசெக சந்திப்பை நடத்தியது!

பிறை, டிச 17-
பத்து கவான் நாடாளுமன்ற ஜசெக உறுப்பினர்களுடன் பினாங்கு ஜசெக தலைமைத்துவம் நேற்று முக்கிய சந்திப்பை நடத்தியது.

பத்து கவானில் ஜசெக தலைமை மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பு அமர்வில் பினாங்கு ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம், துணை தலைவர் ராம் கர்ப்பால் சிங் மற்றும் பினாங்கு முதலமைச்சரும் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினருமான Chow Kon Yeow ஆகியோர் கலந்து கொண்டனர்.

📌 இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
✅ தொழிலாளர் சிக்கல்கள்
✅ ஒற்றுமை அரசாங்கத்தின் அரசியல் கட்சி
✅ விளையாட்டு வசதிகள்
✅ இந்திய சிறப்பு குழு
✅ உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட 12 உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறவும் கேள்விகளைக் கேட்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டனர்.

கவனமாகக் கேட்டு ஆக்கப்பூர்வமான பதிலை வழங்கிய பினாங்கு ஜசெக தலைமைக்கு நன்றி.
இந்த அர்த்தமுள்ள அமர்வு, பத்து காவானில் உள்ள மக்களின் தேவைகளில் ஒத்துழைப்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கிறது என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles