

கோலாலம்பூர் டிச 18-
ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இந்திய சமுதாயத்தின் அமோக ஆதரவுடன் ம இகா தொடர்ந்து வெற்றி நடைபோடும் என்று மத்திய செயலவை உறுப்பினரும் விளையாட்டு பிரிவு தலைவருமான ஆண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இன்று ம இகா மாபெரும் எழுச்சி பாதையில் பயணிப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பக்கப்பலமாக தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் உட்பட நாடு தழுவிய அளவில் ம இகா கிளைத் தலைவர்கள் அனைவரும் அணி வகுத்து நிற்கிறார்கள்.
இந்திய மாணவர்களின் கல்விக்கு ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறார்.
இழந்த ஆதரவை பெற்று இன்று இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வழங்கி வரும் கட்சியாக ம இகா மீண்டும் உருவெடுத்துள்ளது.
இந்திய சமுதாயம் எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் கட்சியாக ம இகா விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பிறந்த நாளை முன்னிட்டு ம இகா விளையாட்டு பிரிவு சார்பில் ஆண்ட்ரு டேவிட் தலைமையில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

