கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளந்தான் மாநில மக்களுக்கு 2 லட்சம் வெள்ளி உதவி பொருட்கள்! டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் டிச 19-
நாட்டில் பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிளந்தான் மாநிலம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வெள்ளி மதிப்பிலான உதவிப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டதாக
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சின் கீழ் இயக்கும் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 580,000 வெள்ளி மதிப்பிலான உதவிப் பொருட்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்..

இன்று கிளந்தான் மாநில மக்களுக்காக 200,000 வெள்ளி மதிப்பிலான உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டது.

அம்மாநிலத்தில் உள்ள அனைத்து 14 நாடாளுமன்றத்திலும் உள்ள மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில் இந்த உதவிகளின் வாயிலாக நாடு முழுவதும் 5,800 பேர் பயனடைந்துள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் மட்டும் 2,000 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது என்று இன்று உதவிப் பொருட்களை அனுப்பி வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles