
கோலாலம்பூர் டிச 19-
70 லட்சம் வெள்ளி தொடர்பான 17 பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார்
டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இன்று விடுவிக்கப்பட்டார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யக்கோரி ரோஸ்மா தாக்கல் செய்த மனுவை ஏற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு, அக்டோபர் 4, 2018 அன்று ரோஸ்மா மீது முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் RM7,097,750 பணமோசடி செய்ததாக 12 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
மேலும் உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு தனது வருமானத்தை அறிவிக்கத் தவறியதற்காக ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
டிசம்பர் 4, 2013 மற்றும் ஜூன் 8, 2017 க்கு இடையில் அவர் குற்றம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

