மோரிப் சட்டமன்றத் தொகுதியில் கிறிஸ்மஸ் பொது உபசரிப்பு!

ஷா ஆலம், டிச 20- எதிர்வரும் டிசம்பர் 25 தேதி புதன்கிழமை மோரிப் சட்டமன்றத் தொகுதி நிலையிலான கிறிஸ்மஸ் 2024 பொது உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தாமான் ஶ்ரீ புத்ரா, பந்திங், சிலாங்கூரில் நடைபெறும் என மோரிப் தொகுதியின் இந்திய சமூக தலைவர் சாம்சோன் தெரிவித்தார்.

பிற்பகல் 1.00க்கு தொடங்கி மாலை 4.00 மணிக்கு முடிவடையும் இந்த பொது உபசரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்த கிறிஸ்மஸ் பொது உபசரிப்பில் பல நிகழ்வுகள் இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles