சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! சந்தேகம் எழுப்பியவர்களுக்கு நாசா விளக்கம்

வாஷிங்டன், டிச 26- சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதை அடுத்து நாசா விளக்கம் அளித்துள்ளது.

நாசா அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 59.

இவரும், புட்சி வில்மோர் என்ற மற்றொரு வீரரும் ஜூன் 5ல், ‘போயிங் ஸ்டார் லைனர்’ விண்கலம் வாயிலாக விண்வெளி சென்றனர்.

ஒன்பது நாட்களுக்கு பின் அதே விண்கலத்தில் அவர்கள் பூமிக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டுதான் அவர்கள் பூமிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles