
நாகர்கோவில்: டிச 31-
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25ஆவது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே ரூ.37 கோடியில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சூழும் பகுதியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 2000ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம், தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

