
காளிதாஸ் சுப்ரமணியம்
மா பவளச்செல்வன்
கோலாலம்பூர்,ஜன7-
மின்சார கார்கள் பயன்பாடு இன்று நாட்டில் அதிகரித்து வரும் பட்சத்தில் உள்நாட்டு தயாரிப்பில் அதனை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் புரோட்டோன் நிறுவனம் இ-மாஸ் எனும் மின்சார காரை வெளியிட்டுள்ளது.
அந்த வகை வாகனத்தின் விற்பனை மையமாகவும் பழுது மற்றும் சேவையை வழங்கும் மையம் இன்று சிகாம்புட்டில் திறப்பு விழா கண்டது.
இங்குள்ள புரோட்டோன் ஷஹாயா கார் விற்பனை மற்றும் சேவை மையத்தில் முதல் இந்த மின்சார கார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளியீடான இ-மாஸ்7 ரகக் காரை வாங்க எண்ணம் கொண்டுள்ளவர்கள் தாராளமாக இந்த மையத்தை நாடலாம்.
இந்த மையத்தை புரோட்டோன் நிறுவனத்தின் துணை செயல்முறை அதிகாரி ரொஸ்லான் அப்துல்லா திறந்து வைத்தார்.

