கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் மூன்று ஆலயங்களில் பொங்கல் விழா

ஷா ஆலம், ஜன.7 – கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இவ்வாண்டு
பொங்கல் விழா தொகுதியிலுள்ள மூன்று ஆலயங்களில் வெகு சிறப்பாக
நடைபெறவுள்ளது.

இம்மாதம் 14ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு ஆலம் மேகா, ஸ்ரீ மகா முத்து
மாரியம்மன் ஆலயத்திலும் 15ஆம் கோத்தா கோத்தா கெமுனிங், ஸ்ரீ மகா
மாரியம்மன் ஆலயத்திலும் 16ஆம் தேதி தாமான் ஸ்ரீமூடா ஸ்ரீ சுவர்ண
மகா மாரியம்மன் ஆலயத்திலும் இந்த பொங்கல் விழா நடைபெறும்.

தமிழர்களின் உழவர் திருநாளான இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு
நமது பாரம்பரியம் மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
சம்புநாதன் கூறினார்.

இந்த பொங்கல் நிகழ்வில் வட்டார மக்கள் திரளாகக் கலந்து
சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles