பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை பெற்ற முதல் கால்பந்து வீரர்: மெஸ்ஸி சாதனை

வாஷிங்டன்: ஜன 7- அமெரிக்க நாட்டின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த 1963 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு, சமூக பங்களிப்பு மற்றும் உலக அமைதி அல்லது தனிநபர்களின் சமூக செயல்பாடு போன்றவற்றை ஈடுபட்டு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 19 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

ஹிலாரி கிளிண்டன், டென்சல் வாஷிங்டன் ஆகியோருடன் மெஸ்ஸிக்கும் இந்த விருது வழங்குவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்ட மெஸ்ஸி
இந்த விருதை பெறுவதை கவுரவமாக கருதுவதாகவும், இந்த அங்கீகாரத்தை பெற்றது தனது பாக்கியம் என்றும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles