அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 6 இந்திய வம்சாவளி எம்பிக்கள் பதவியேற்பு!

வாஷிங்டன் ஜன 7-
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் புதிய எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இதில் சுகாஸ் சுப்பிரமணியம், அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், ஸ்ரீ தானேதர் ஆகிய 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles