
சென்னை: ஜன 8- இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்டு விளங்கும் கங்கை அமரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரரான கங்கை அமரன் ஆரம்பத்தில் இளையராஜாவிற்காக உதவிகளை செய்து வந்த நிலையில் பிறகு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.
அதோடு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பல திறமைகள் கொண்டு விளங்குகிறார்.

