
கோலாலம்பூர் ஜன 7-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமுதாயத்திற்காக நிறைய செய்தவர் என்று ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் மற்றும் செயலலை உறுப்பினர் அண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.
அவர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வழங்கினார்.
நாட்டில் ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகளை கட்ட அனுமதி வழங்கினார்.
தமிழ்ப் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கினார்.
மெட்ரிகுலேஷன் கல்வி பயில 2,500 இந்திய மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கி தந்தார்.
தைப்பூசத்தின் போது வேட்டி ஜிப்பா அணிந்து பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு வந்து விடுவார்.
இவருக்கு நீதி கிடைக்க ம இகா தொடர்ந்து போராடி வருகிறது.அந்த வகையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாங்களும் பக்கப்பலமாக இருப்போம் என்று அவர் சொன்னார்.
நேற்று பத்துமலை முருகன் திருத்தலத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

