குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய தவறிய கடைக்கு அபராதம்!

ஷா ஆலம், ஜன 10: குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய தவறியதற்காக ஜாலான் மேடன் 10 இல் உள்ள கடை ஒன்றுக்கு இரண்டு அபராதங்களை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி வெளியிட்டது.

கடையின் உரிமையாளர் கழிவு அகற்றும் நடவடிக்கையை முறையாக செய்ய தவறியதாக சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டது என பிபிடி முகநூலில் தெரிவித்துள்ளது.

” சட்டம் (UUK) 4 UUKPS MBPJ 2007 மற்றும் UUK6 UUKPS MBPJ 2007 ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் கடைகள் நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பராமரிக்கப் படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எப்போதும் இணங்குமாறு எம்பிபிஜே அறிவுறுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles