அமைச்சர் கோபிந்த் சிங் தலைமையில் டமான்சாரா டமாயில் தைப்பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது!

டமான்சாரா, ஜன 15-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டை முன்னிட்டு
Persatuan Komuniti India Damansara Damai சங்கத்தின் தலைவர் ரமேஷ் பச்சையப்பன் ஏற்பாட்டில் நேற்று இரவு தைப் பொங்கல் கொண்டாட்டத்தை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

டமான்சாரா டாமயில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் டமான்சாரா டமாய் இந்திய சமுக சங்கத்தின் தலைவர் ரமேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து பொங்கல் வைத்தனர். தமிழர்கள் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் டமான்சாரா டாமயில் தைப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற முழு ஆதரவு வழங்கி வரும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ வுக்கு ரமேஷ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த தைப்பொங்கல் விழா
ஒரு கலகலப்பான மற்றும் இணக்கமான சூழ்நிலை வண்ணமய மாக்கியது எனலாம்.

உலகம் மிக வேகமாக நகர்கிறது, நாம் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இந்திய சமூகத்தின் நலன் உட்பட மக்களின் நலனுக்காக.
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை வழங்கும் முயற்சிகள் மூலம் மலேசியாவின் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் அமைச்சு உறுதிபூண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு மலேசியரும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், டிஜிட்டல் புரட்சியிலிருந்து பயனடைவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

இந்த தருணத்தில் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கொண்டாடும் போது, ஒரு சமூகமாக நமது பிணைப்புகளை வலுப்படுத்தி, இந்திய சமுதாயத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தைப்பொங்கல் பண்டிகை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் வாழ்வாதாரத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் தரட்டும் என்று அவர் சொன்னார்.

இந்த விழாவில் பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் சுரேஸ் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles