

ஈப்போ, ஜன.15: இங்குள்ள மேடான் இஸ்தானா வணிகதலத்தில்( கல்லுமலை ஆலய முன்புறத்தில்) இந்திய வணிகர்கள் முதல் முறையாக இங்கு பொங்கல் வைத்து கொண்டாடினர் என்று ஏற்பாட்டுக்குழு தலைவர் ராஜு கூறினார்.
இந்த தருணத்தில் உலகில் வாழும் அனைத்து தமிழர்கள் மற்றும் இந்துகளுக்கு இங்குள்ள வணிகர்கள் சார்பில் அவர் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாண்டில் அனைவருக்கும் நன்மைகள் மற்றும் நல்ல விசயங்கள் நடைபெற வேண்டும். அத்துடன், இங்குள்ள அனைத்து இந்திய வணிகர்களும் அவர்களின் வியாபாரத்துறையில் மேம்பாடு அடைய வேண்டும் என்று பேராக மாநில தமிழர் திருநாள் இயக்க தலைவர் எம். மாயமுத்து இந்த பொங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்டபோது கூறினார்.