
சுங்கை பட்டாணி
மார்ச் 16-
கெடா கீம்மாவின் ஏற்பாட்டில் வசதி குறைந்த 150 மக்களுக்கு உதவிகளை வழங்கியது கெடா முஸ்லிம் இயக்கம்.
ஆண்டு தோறும் இயக்கத்தின் பரிமனையில் நோம்பு திறப்பு உபசரிப்புடன் வழக்கமான விளக்கவுரையுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

தேசிய நிலையில் கிம்மாவின் சாதனை தலைவர் டத்தோஶ்ரீ இப்ராஹிம் கூறும்போது மலேசிய இந்திய முஸ்லிம் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு பிரதமரிடம் விண்ணப்பம் செய்து போராடி வருகிறோம்.
நாம் தேசிய முன்னணியின் ஆதரவாளர் என்ற நிலையில் வரும் தேர்தலில் போட்டியிட நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்ற இடங்களுக்கு விண்ணப்பம் செய்து வருகிறோம்.
நான் இருக்கும் வரையில் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் மற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பெற்று கல்வி பொருளாதாரம் வர்த்தகம் குடியுரிமை புமிபுத்ரா அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பேசிய கெடா கிம்மா தலைவர் நவாப் ராஜா நமது ஒற்றுமைதான் நமது பாலம் இந்த நிகழ்வுக்கு இரண்டாவது முறையாக மாலிக் streams நிறுவனம் 150 வசதி குறைந்த நமது குடும்பங்களுக்கு அன்பளிப்பு வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
சிறப்பு வருகையாளராக டத்தோ மாலிக், பினாங்கு மாநில முஸ்லிம் லீக் தலைவர் மற்றும் பலர் கலந்துக் கொண்டு நோன்பு பெருநாள் ராயா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

