
நாட்டில் உள்ள ஏதாவது ஒரு சாலைக்கு அமரர் துன் சாமிவேலு அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்கத் தலைவர் முத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் அவரின் பெயரை சூட்டப்பட வேண்டுமென நாங்கள் முகத்திரை கொடுத்தோம்.
இப்போது அவர் மறைந்து விட்டார்.
கெடா மாநிலத்தில் உள்ள எம்ய்ஸ்ட் பல்கலைக் கழகத்திற்கும் அவரின் பெயர் சூட்டப்பட வேண்டும்.
மேலும் அவரின் நினைவாக நினைவு சிலை ஒன்றும் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
நாட்டில் உள்ள இந்திய டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அவர் மிகப்பெரிய உதவியை புரிந்து இருக்கிறார்.
அந்த வகையில் சாலைக்கு அவரின் பெயர் கண்டிப்பாக சூட்டப்பட்ட வேண்டுமென மலேசியா மக்கள் கம்யூனிகேஷன் இந்திய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக முத்து தெரிவித்தார்.