பிப்ரவரி முதல் 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய விகிதம் அமல்

கோலாலம்பூர், ஜன 24 – பிப்ரவரி முதலாம் தேதி முதல் 1,500லிருந்து 1,700 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் அமலுக்கு வருகிறது.

இருப்பினும், பட்டதாரிகள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியமாக இந்த புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவுறுத்தியுள்ளார்.

”இந்த குறைந்தபட்ச ஊதியத்தை ஆரம்ப ஊதியமாக பார்க்கக்கூடாது என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இது குறிப்பாக பட்டதாரிகள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அல்ல. குறைந்த திறன்கள் அல்லது அதிக அடிப்படை வேலைகள் மட்டும் தெரிந்தவர்களுக்காக வழங்கப்படும் அடிப்படை சம்பளம் இதுவாகும், ” என்றார் அவர்.

கோலாலம்பூரில் 2025ஆம் ஆண்டிற்கான ஆசியான் ஒஎஸ்எச் சம்மிட் உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles