
கோலாலம்பூர் ஜன 24-
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் இப்போது ம இகா தேசிய விளையாட்டு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
என் மீது நம்பிக்கை வைத்து விளையாட்டு பிரிவு தலைவராக நியமனம் செய்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி தேசிய ம இகா விளையாட்டு பிரிவு கூட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த தருணத்தில் அனைத்து மாநிலங்களிலும் ம இகா விளையாட்டு பிரிவு பொறுப்பாளர்களை நியமனம் செய்த மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்

