சுங்கைபட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் முகூர்த்தக்கால் நட்டு தைப்பூசத் திருவிழா பூஜை தொடங்கியது!

சுங்கைபட்டாணி, ஜன 28

இன்னும் 2வாரத்தில் கொண்டாடப்படவிருக்கும் சுங்கைபட்டாணி ஸ்ரீ சுப்பிரமனியர் ஆலய தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூகூர்த்தகால் நடும் நிகழ்வு விமரிசையாக இன்று நடைபெற்றது.

நாட்டின் மூன்றாம் நிலையில் கொண்டாடப்படும் சுங்கைபட்டாணி தைப்பூச விழாவில் ஒவ்வொரு வருடமும் 3 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

முதன்மையாக விநாயகர் பூஜை நடைபெற்றது.இந்த ஆண்டு சுங்கைபட்டாணி தைப்பூசம் கடந்த ஆண்டை விட மேலும் சிறப்பாக பக்தர்களுக்கு அனைத்து எளிய வகையில் அமைவதற்கு தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருவதாக தேவஸ்தானத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் தெரிவித்தார்.


வருகிற 31ஆம் தேதி வெள்ளிகிழமை தேவஸ்தானத்தில், கெடியேற்றம் வைபவம் நடைபெறுவதால் பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று முகூர்த்த கால் நடும் வைபவத்தில் கால் நடும் நிகழ்வில் 200க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இந்த ஆண்டு சுங்கைபட்டாணி தைப்பூச விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் கலந்துக் கொள்வார் தேவஸ்தானம் பெரிதும் எதிர்ப்பார்கிறது.கடந்த வாரம் அவரை நேரிடையாக மஇகா அலுவகத்தில் தேவஸ்தானம் சந்தித்து அழைப்பினையும் விடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles