கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- அமைச்சர் கோபிந் சிங்

கதும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிச் சிக்கலை தாம் அறிந்தததாகவும், அதனைத் நுண்ணோக்குவதாகவும் அமைச்சர் கோபிந் சிங் டியோ  தெரிவித்தார். மாணவர்களின் கல்வி மட்டும் அல்ல, அவர்களின் பாதுகாப்புக்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2023-ம் ஆண்டு, கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி,  தாவார் தேசிய பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஒரு வருடமாக தாவார் தேசியப் பள்ளியில் இந்தத் தமிழ்ப்பள்ளி இயங்கிவந்தது.

மிக விரைவில் தேசியப் பள்ளி மறுசீரமைக்கப்படும் என்பதால், கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனை குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது.. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவையை முன்னிறுத்தி, தக்கத் தீர்வு காணப்பட வேண்டும்.

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இந்தப் பிரச்சனையால் தடைபட்டுவிடக்கூடாது. அதே வேளையில் அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண நான் கல்வியமைச்சை உடனடியாக தொடர்புகொண்டு பேசினேன். விரைவில் இந்தப் பள்ளிக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது எனது நோக்கம் ஆகும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles