தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுக் காண வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுக் காண வேண்டும்.

பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

பகாங் மாநிலத்தில் இன்னமும் ஒரு தமிழ்ப்பள்ளி கொள்கலனில் செயல்பட்டு வருகிறது.

தற்போது கெடா மாநிலத்தில் உள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் பற்றாக்குறையில் பல பள்ளிகள் இட மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் இடங்களில் பள்ளிகள் இருப்பதில்லை.

இப்படி இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளை கண்காணிக்க கல்வியமைச்சின் கீழ் சிறப்பு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles