தமிழ் ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக வெளியிட குயில் ஜெயபக்தி நிறுவனம் முன் வருகிறது!

கோலாலம்பூர் ஜன 1-
மலேசிய திருநாட்டில் புதிய தமிழ் எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் எழுத்து துறையில் அதிக அளவில் முத்திரை பதிக்க வேண்டும். தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக வெளியிட குயில் ஜெயபக்தி நிறுவனம் முன் வருகிறது.

ஆகவே தரமான படைப்புகளை படைக்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

புத்தகம் எழுதினால் என்ன கிடைக்கும் என்று பாராமல் உங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முன் வாருங்கள். வாசிக்கும் சமுதாயத்தை உருவாக்க முடிந்தால் புத்தக விற்பனையும் அதிகரிக்கும்.

நாளும் தெரிய நாளும் படிப்போம், வாசிப்பு நமது சுவாசிப்பு என்ற தாராக மந்திரத்தோடு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் குயில் ஜெயபக்தி நிறுவனம் இன்றும். தமிழுக்கு சேவையாற்றி வருகிறது என்று டத்தோ டாக்டர் கு செல்வராஜ் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எழுத்துத் துறையில் புதிய எழுத்தாளர்களாக உருவாகி இருக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தக அறிமுக விழா மற்றும் பாராட்டும் விழா இன்று குயில் ஜெயபக்தி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles