

பேரா மாநிலத்தில் அதிகமான மாணவர்களைக் கொண்ட பள்ளியாக விளங்கும் கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் இணைக் கட்டடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தம்புன் நாடாளுமன்ற தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர் . சுரேஷ்குமார் கூறினார்.
இப்பள்ளியில் 500 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் 35 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 1995 ஆம் இரண்டு மாடிக்கொண்டு புதிய தமிழ்ப்பள்ளி தோற்றம் கண்ட வேளையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு பள்ளி மேலாளர் வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு இணைக் கட்டடத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தது.
அதன் பயனாக அந்த கட்டத்தை எழுப்ப அரசாங்கம் ரிங்கிட் 38 லட்சத்தை அங்கிகரித்து கடந்த 2019 இல் தொடக்க நிதியாக ரிங்கிட் 10 லட்சம் வழங்கியது.
அதன் பின்னர் எஞ்சிய நிதியை பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டத்தோ சுரேஷ்குமார் குறிப்பிட்டார்.
தற்பொழுது அந்த கட்டுமாணப்பணிக்கு ரிங்கிட் 40 லட்சம் தேவை என்று பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளதால் அந்த நிதி பெற முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்த இணைக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் என்றார் .
தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கிளேபாங் தமிழ்ப் பள்ளியில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலத்துக்கொண்ட டத்தோ ஆர். சுரேஷ்குமார் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிளேபாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்துக்கொண்டதுடன் நடத்தப்பட்ட கோலப்போட்டி, பொங்கல் போட்டி பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
சிறுவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

