
சுங்கைபட்டாணி, பிப் 2-
கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக தைப்பூசம் மற்றும் சமய விழாக்காளில் இந்து பணிப்படையின் மேற்பார்வையில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது தமக்கு பெருமிதம் அளிப்பதாக அரசு சாரா இயக்க ஆலய ஒருங்கிணைப்பு தலைவரும் செந்தோச சட்டமன்ற உறுப்பினரும் இந்து பணிப்படை ஸ்தாபகரில் ஒருவரான சிறப்பு பிரமுகர் டாக்டர் குணராஜ்
ஜோர்ஜ் கூறினார்.
நேற்று சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான நூலகத்தில் நடைபெற்ற இந்து பணிப்படையின் 13ஆவது நிகழ்வில் தலைமை தாங்கி பேசிய அவர், சமயத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை இந்து பணிப்படை துணிசலாக மேற்கொண்டது மக்கள் அதை ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியினை அளிக்கிறது.
இதனால் விழாக்காலங்களில் சமயத்தை
இழிவுப்படுத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் ஒழுங்கப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பணிப்படையினரில்
கெடா சுங்கைபட்டாணி பணிப்படை தனித்துவம் வாய்ந்திருப்பதாக அவர் பெருமிதம் கொன்டார்.

இந்த நிகழ்வில் 10 வருடங்களுக்கு மேலாக பாணிப்படையில் சேவை செய்து வந்தவர்களுக்கு தலைமையகத்தில் இருந்து நற்சான்றிதழகள் வழங்கப்பட்டன. தொண்டர்களுக்கு பனியன்களும் கால்சட்டைகளும் வழங்கப்பட்டன.
இந்து பணிப்படையின் சேவை தமக்கு நிறைவு அளிப்பதாகவும் அதற்கு மஇகா உறுதுணையாக இருக்கும் எனவும் கூறிய மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே.சுரேஸ் ரிங்.மலேசியா 500 வெள்ளியினை வழங்குவாதாகச் சொன்னார்.
ஆலயத்தில் வெளியிடப்பட்டிருக்கும் சட்டத்திட்டங்களை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். அதற்கு இந்து பணிப்படை குழுவினர் உறுதுணையாக இருந்து செயல்படுவர் கெடா மாநில பணிப்படை குழுவின் தலைவர் வி.மாணிக்கவாசம் பேசினார்.
80க்கும் அதிகாமனவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். பணிப்படை, கிளீன் தைப்பூசம் மற்றும் உழவர் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த தைப்பூச சிழாவில்தங்கள் சேவை வழங்க முன் வந்துள்ளனர்.
தைப்பூசத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்ப்பந்தல்களில் பக்திப் பாடல்களை மட்டுமே ஒலிப்பரப்ப வேண்டும். நள்ளிரவு 12மணிக்கு மேல் பாடல்கள் எதுவும் பந்தல்களில் ஒலிபரப்பக்கூடாது என்று காட்டாயமாக்கப்படிருக்கிறது.
தங்களோடு ஆலயம், காவல்துறை மற்றும் நகராண்மைக்கழகம் இணைந்து தங்கள் பக்தர்க்ளுக்கான பாதுக்காப்பு பணியினை தொடங்கப் விருப்பதாக வி.மானிக்கவாசாகம்
சொன்னார்.
இந்த நிகழ்வில் மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே.சுரேஸ்,மலேசிய இந்து சங்கம் கெடா மாநில பேரவை தலைவர் எஸ்.பரமசிவம்,ஶ்ரீ சுப்பிரம்ணிய தேவஸ்தானத்தின் துணைத் தலைவர் சங்கரன் ,கோலமூடா மாவட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர் கனேசன் அகியோர் கலந்து சிறப்பித்தனர்.

