பிபிபி சிப்பாங் தொகுதி மற்றும் சிப்பாங் மக்கள் வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டம்

கடந்த 26- ஆம் திகதி இந்த நிகழ்ச்சி தாமான் ஸ்ரீ சுங்கை பீலேக் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடந்தேறியது.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொடங்கி வைத்த சிலாங்கூர் பிபிபி கட்சியின் தகவல் பிரிவு தலைவர் திரு. குமரவேலு அவர்களுக்கும் இந்த வேளையில் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏறத்தாழ 120 பேருடன் சுமார் 15 போட்டி விளையாட்டுகள் சிறப்பாக நடந்தேறியது. போட்டி விளையாட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவர்க்கும் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன.

பிபிபி சிப்பாங் தொகுதி தலைவர் திரு. ஜேக்கப் சாமுவேல் ( JMN , PJK ) அவர்கள் வட்டாரவாசிகளின் நல்வரவேற்பைக் கண்டு ஆனந்தம் அடைவதாகக் கூறினார். அதேவேளையில் திரு. ஜேக்கப் சாமுவேல் அவர்கள் பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அவர்களுக்கும் மற்றும் சிலாங்கூர் பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை கட்சி மற்றும் கழகத்தின் சார்பாக தெரிவித்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles