
மா.பவளச்செல்வன்
பத்துமலை பிப் 5-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு பிப்ரவரி 10,11 ஆம் தேதிகளில் பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் பத்துமலை திருத்தலத்தில் பக்தர்கள் வசதிக்காக பல ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.
இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத்தில் அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி காலை பத்து மணிக்கு பத்துமலை தைப்பூச விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இவர்களை தவிர்த்து ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறோம்.
அவரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.
அவர் வந்தால் மிகவும் சந்தோசம். இல்லையெனில் வேறு ஒரு நாளில் அவர் வரக்கூடும்.
மாமன்னருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
அன்றைய தினத்தில் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் வர முடியவில்லை என்று பதில் அனுப்பி இருக்கிறார்.
எதாவது ஒரு நாளில் மாமன்னர் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று டான்ஸ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

