
மா.பவளச்செல்வன்
பத்துமலை, பிப் 5-
தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு தாய்க்கோவில் என்றழைக்கப்படும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு பத்துமலையை நோக்கி புறப்படுகிறது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.
பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு புறப்படும் வெள்ளி ரதம் மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பத்துமலை திருத்தலம் வந்தடையும்.
வழிநெடுகிலும் அர்ச்சனைகள் நடைபெறும். அதேசமயம்
வெள்ளி ரதம் பத்துமலையை அடையும் வரை இருவழி நெடுகிலும் போலீஸ்காரர் தங்களது கடமையை சிறப்பான முறையில் செய்வார்கள்.
வெள்ளி ரதத்துடன் நடந்து வரும் பக்தர்கள் கட்டுக் கோப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
வெள்ளிரதம் பத்துமலையை வந்தடைந்ததும் கொடியேற்றும் விழா இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து தைப்பூசம் கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று அவர் சொன்னார்.
உலகப் புகழ்பெற்ற தளமாக பத்துமலை திருத்தலம் விளங்குகிறது.
வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பத்துமலை தைப்பூசத் தை காண வருகை புரிந்துள்ளனர்.
இவ்வாண்டும் லட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில் கூடுவார்கள்.
இதனிடையே பத்துமலை முருகப் பெருமானுக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் உடைகளை அணிந்து வரும் படி அவர் அன்போடு கேட்டுக் கொண்டார்.
சமய நெறியோடு பத்துமலை தைப்பூசத் தை கொண்டாடி மகிழ்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன், கதிரேசன், செயலாளர் சேதுபதி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

