
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர்,பிப் 6-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலை திருத்தலத்திற்கு வருவாரா எனும் கேள்வி இந்தியர்கள் மத்தியில் எழுந்து நிலையில் பக்தர்களின் எதிர்பார்ப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நாளை பூர்த்தி செய்யவுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பத்துமலை திருத்தலத்திற்கு வருகை மேற்கொள்ளவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நாளை மாலை 3 மணிக்கு பத்துமலை திருத்தலம் வருகை புரியும் போது பிரதான நுழைவாயிலில் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு நல்கப்படும் என்று டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலை வருகையானது இந்தியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

