முஸ்லிம் அல்லாதவர்களின் இறப்புக்கு செல்லஜாக்கிம் அனுமதி பெற வேண்டுமா? ஒற்றுமையை சீர்குலைக்கும் என்கிறார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர் பிப் 6-
முஸ்லிம் அல்லாத நண்பர்களின் இறப்புக்கு செல்ல ஜாக்கிமின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி மலேசியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் துறை இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் நயீம் மொக்தார் நேற்று
மதங்களுக்கு இடையேயான நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன், முஸ்லிம் அல்லாதவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் முஸ்லிம் நண்பர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என அமைச்சர் சொல்ல வருகிறாரா என்று கேள்வியை எழுப்பினார்.

யாராவது இறந்தால், முஸ்லிம்கள் இறுதி மரியாதை செலுத்த அனுமதிப்பதற்கு முன்பு ஜாக்கிமிடம் அனுமதி கேட்க வேண்டுமா? என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles