கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத் திருவிழா! ஒரு லட்சம் பக்தர்கள் திரள்கிறார்கள்

கோல சிலாங்கூர், பிப் 6-
பத்துமலை, பினாங்கு, ஈப்போவை தவிர்த்து பக்தர்கள் அதிக அளவில் கூடும் மிகப்பெரிய தைப்பூசத் திருவிழாவாக கோலசிலாங்கூர் இரண்டரை மைலில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் விளங்குகிறது.

அந்த வகையில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு கோல் சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலய தைப்பூசத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஆலயத் தலைவர் கண்ணதாசன் தெரிவித்தார்.

115 ஆண்டுகள் வரலாற்றை சுமந்து வெற்றி நடை போடும் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு கோல் சிலாங்கூர் ஜேகேஆர் வெள்ளை பாலத்தில் இருந்து ஆயிரம் பேர் பால் குடங்களை ஏந்தி காணிக்கை செலுத்துவார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆலய பால்குட அன்னதானம் நடைபெறும்.

அன்றைய தினத்தில் மாலை 4.30 மணிக்கு புக்கிட் ரோத்தான் ஸ்ரீ சக்திபுரம் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சமேதராய் இரதத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ சூழ நாதஸ்வரம் இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு இரவு பத்து மணிக்கு மேல் ஆலயம் வந்தடையும் என்று அவர் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் குடங்கள், கரும்பு காவடிகள், காவடிகள் ஏந்தி காணிக்கை செலுத்துவார்கள்.

ஆர்பாட்டமின்றி அமைதியான முறையில் பக்தர் சமய நெறிகளை பின் பற்றி காவி உடை அணிந்து பால் குடம், காவடிகள் எடுத்து வரும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஒரு வார காலமாக தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த தொடங்கி விட்டனர்.

இதனால் இவ்வாண்டு கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் வார்கள்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

மேலும் 50,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்படும்.

250 க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய ஆலய வரலாற்று நூல் பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயச் செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் புஷ்பா நாதன், அறங்காவலர் திருமூர்த்தி, ஆலோசகர் ஜீவா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles