கோலசிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் தீமிதி திருவிழா !

கோல சிலாங்கூர், பிப் 6-
கோல சிலாங்கூர் – பத்தாங் பெர்ஜுந்தை வட்டாரத்தில் வாழ்ந்த தோட்டப் பாட்டாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்துக் கொண்டிருக்கும் புக்கிட் பிலிம்பிங் தோட்ட ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் தீமிதி திருவிழா வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் கொண்டாடப்படும் வேளையில் இந்த ஆலயத்தில் அம்மனுக்கு தீமிதி திருவிழாவும் இணைந்து நடத்தப்படுகிறது.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று ஆலயச் செயலாளர் மு.குணசேகர் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள
தாமான் மாணிக்கவாசகம்,
தாமான் புக்கிட் தாலாங்,
ராசா மூசா தோட்டம்,
புக்கிட் பிளிம்பிங் தோட்டம் மற்றும்
கம்போங் பாரு தோட்டத்தில் வாழ்ந்த முன்னாள் தோட்டப் பாட்டாளிகள் உட்பட இப்போது வாழ்ந்து வரும் மக்கள் தைப்பூசத் தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

சுமார் பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் வாழை இலையில் உணவு பரிமாறப்படும் என்று அவர் சொன்னார்.

ஆலயத் தலைவர் தொழில் அதிபர் டத்தோ சிவா தலைமையில் இவ்வாண்டும் தைப்பூசத் தீமிதி திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் பெரும் திரளாக தைப்பூசத் தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலயக் குருக்கள்
வேலாயுதம் பெருமாள்

சரு முருகன் ஆறுமுகம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles