
பத்துமலை பிப் 5-
ஹிண்ட்ராப் பேரணியின் போது பத்துமலை திருத்தலத்தில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்திரமாக இருக்க பத்துமலை திருத்தலத்தில் உள்ள கோவில் கதவை திறந்து விட்டோம்.
இதனால் பல பக்தர்கள் மரணம் அடையாமல் இருக்க நாங்கள் காப்பாற்றினோம் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா இன்று தெரிவித்தார்.
கோவில் கதவை திறந்து விட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பத்துமலையில் கூடினர்.
அன்றிரவு நாங்கள் மட்டும் கதவை திறந்து விடாமல் இருந்திருந்தால் பலர் இறந்து போய் இருப்பார்கள்.
கதவை திறந்து விட்டதற்காக போலீசார் எங்களை திட்டினார்கள்.
ஆனால் இன்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
உண்டியலில் காசு போட வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
எங்களுக்கு வர வேண்டியது வரும்.
டத்தோஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி அவர்கள் 50,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்துள்ளார்.
உலகப் போற்றும் வகையில் இன்று பத்துமலை திருத்தலம் விளங்குகிறது என்றால் அதற்கு ம இகா தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.
துன் சாமிவேலு காலம் தொற்று இன்று வரை ம இகா அளப்பரிய சேவைகளை வழங்கி புரிந்துள்ளது.
டத்தோஸ்ரீ சப்ரி இஸ்மாயில் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அவரிடம் இருந்து ம இகா தலைவர்கள் 20 லட்சம் வெள்ளியை பத்துமலை திருத்தலத்திற்கு பெற்றுத் தந்தார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு பத்து லட்சம் வெள்ளியை வழங்கியது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

