

கோலப்பிலா, ஜூலை 31-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் பீலா சட்டமன்ற தொகுதியில்
Leeza Md Yasin போட்டியிடுகிறார் .
நேற்று இவரை ஆதரித்து பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தீவிர பிரச்சாரம் செய்தார்.
பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் YBhg Dato Inder Singh, நெகிரி செம்பிலான் மாநில தலைவர் Datuk Arumugam Rajamarnickam ,
இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைய மக்கள் திரண்டு வந்து வாக்களிக்கும் படி டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

