இந்திய சமுதாயத்தின் மீது பிரதமர் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்!டத்தோஸ்ரீ இரமணன் கூறுகிறார்

கோலாலம்பூர் பிப் 8-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

நேற்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் பத்துமலை திருத்தலத்திற்கு க
வருகை புரிந்தது இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும் என்று டத்தோஸ்ரீ இரமணன் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவில் வாழும் இந்து பெருமக்கள் ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தைப்பூச திருவிழாவை கொண்டாடவுள்ளனர்.

நாட்டில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு தாய்க்கோவிலாக பத்துமலை விளங்குகிறது.

இதன் அடிப்படையில் இந்த தைப்பூச விழா ஏற்பாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நேற்று பத்துமலைக்கு வந்திருந்தார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றார்.

பத்துமலைக்கு பிரதமரின் வருகை இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles