வெள்ளிரத ஊர்வலத்தில் வழிநெடுகிலும் அர்ச்சனைகள் – மக்கள் கூட்டம் !

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் பிப் 10-
தமிழ் கடவுள் முருகப் பெருமான் உலகம் முழுவதும் தைப்பூசம் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.உலகப் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச கொண்டாட்டம் களைக் கட்டி இருக்கிறது.

நேற்று இரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் இன்று மாலையில் பத்துமலை திருத்தலத்தை வந்து அடைந்தது. வெள்ளி ரதம் ஊர்வலத்தின் போது வழி நெடுகிலும் அர்ச்சனைகள் இடம் பெற்றன.

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles