


காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் பிப் 10-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசம் உலக முழுவதும் களை கட்டியிருக்கிறது.
மலேசியாவில் பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் இன்று மாலையில் பத்துமலை வந்தடைந்தது.
வழிநெடுகிலும் அர்ச்சனைகள் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்ட வேளையில் ஜாலான் ஈப்போ 3 ஆவது மைலில் தமிழ் லென்ஸ் மற்றும் தினத்தந்தி இணையதளத்தின் தண்ணீர் பந்தல் இடம் பெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் சிறப்பு வருகை தந்து குத்து விளக்கேற்றி தண்ணீர் பந்தலை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் டாக்டர் சத்யா பிரகாஷ், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, சுரேஸ் ராவ், தென்றல் ஆசிரியர் வித்யாசாகர் உட்பட பலருக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், தினத்தந்தி ஆசிரியர் முத்தமிழ் மன்னன் மற்றும் தமிழ் லென்ஸ் ஆசிரியர் வெற்றி விக்டர் உட்பட தமிழ் லென்ஸ் நிருபர்கள், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் காளிதாஸ், உதவித் தலைவர் காளிதாசன் இளங்கோ, செயலவை உறுப்பினர்கள் பவளச்செல்வன், காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி, சங்க உறுப்பினர்கள் பாலன், தீபன், ரூபன், அண்ணன் குசா இராமசாமி, சங்கீதா, உட்பட பலரும் தண்ணீர் பந்தல் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

