பத்துமலை தைப்பூசத்தில் 61 கோவில்களுக்கு 5 லட்சத்து 61,000 வெள்ளியை வழங்கியது சிலாங்கூர் மாநில அரசு

செ.வே. முத்தமிழ் மன்னன்

பத்துமலை பிப் 11-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று இரவு சிலாங்கூர் மாநில அரசு 61 கோவில்களுக்கு 5 லட்சத்து 61 ஆயிரம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு கோவில்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று இரவு 61 கோவில்களுக்கு 5 லட்சத்து 61 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

பத்துமலையில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.சம்பந்தப்பட்ட ஆலயங்களின் மேம்பாடு உட்பட இதில் நடவடிக்கைக்காக இந்த நிதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அனைத்து இனங்களில் சமய வழிபாடு உட்பட அனைத்து விவகாரங்களிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது இது காட்டுகிறது.

மேலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும்
சிலாங்கூர் மாநில அரசு பல திட்டங்களை கொண்டுள்ளது.

இந்த திட்டங்களை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், துணை அமைச்சர் தியோ நீ சிங், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles