

பினாங்கு, பிப் 11-
ஜனநாயக செயல் கட்சி துணைத் தலைவரும் டிஜிட்டல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
அமைச்சரோடு அவரது துணைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினர் மக்களோடு இணைந்து திருமுருகனின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
தங்க ரத ஊர்வலத்தில் வழி நெடுக பக்தர்கள் அர்ச்சனைகள் செய்தும், தேங்காய்கள் உடைத்தும் முருகனின் திருவருள் வேண்டி வழிபட்டனர்.
பினாங்கில் அமைந்திருக்கும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்(தண்ணீர்மலை கோவில்) தைப்பூசத்திற்கு பிரசித்தி பெற்ற ஒரு தலம் ஆகும்.
நெடிய வரலாற்றைக் கொண்ட இந்தக் கோவிலில் தைப்பூசத் திருவிழா பல்லாண்டு காலமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

