கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் தைப்பூசத்தில் ஐந்து கோவில்களுக்கு மானியம் வழங்கினார் சிலாங்கூர் மந்திரி பெசார்!

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கெர்லிங், பிப் 11-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் உள்ள ஆலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பத்துமலை, பினாங்கு, ஈப்போ, கோல சிலாங்கூர் அடுத்து மக்கள் அதிகம் கூடும் திருத்தலமாக கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் விளங்குகிறது.

நேற்று இரவு கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு சிறப்பு வருகை தந்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரிக்கு உற்சாகத்துடன் வரவேற்பு நல்கப்பட்டது.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, ராஜேஸ் ராவ், முருகன் உட்பட ஆலய நிர்வாகத்தினர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பூச திருவிழாவில் 61 கோவில்களுக்கு 5 லட்சத்து 61 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி சிறப்பு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கெர்லிங் வட்டாரத்தில் உள்ள ஐந்து கோவில்களுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மானியம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles