
மா. பவளச்செல்வன்
கெர்லிங் பிப் 11-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி கலந்து சிறப்பித்தார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ், கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, ராஜேஸ் ராவ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் புதிய மண்டபம் கட்டுவதற்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி ஒரு லட்சம் வெள்ளியை வழங்கினார்.
ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ள சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரிக்கு கௌலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

