
தஞ்சோங் லம்பூர் பாலம் அருகே ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் உடல் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு மதியம் 12.45 மணிக்கு தகவல் கிடைத்ததாக குவாந்தான் OCPD உதவி ஆணையர் வான் முகமது ஜஹாரி வான் புசு, தெரிவித்தார்.
தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையின் தடயவியல் நோயியல் நிபுணர்களுடன் சேர்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அதில் குற்றம் நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“குவாந்தான் மாவட்டத்தில் வசித்து வந்த 37 வயது பெண், உணவு வியாபாரியாக பணிபுரிந்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
“சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் பணப் பரிமாற்றம் (COD) செய்ய சம்பவ நிகழ்ந்த் பகுதிக்கு வந்திருந்தார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வான் முகமது ஜஹாரி மேலும் கூறினார்.

