பல லட்சம் பக்தர்கள் புடை சூழ வள்ளி தெய்வானையுடன் வெள்ளி இரதத்தில் சுங்கைபட்டாணி நகரை வலம் வந்தார் முருகப்பெருமான்.

சுங்கைபட்டாணி, பிப்13-

பல லட்சம் பக்தர்கள் புடை சூழ வள்ளி தெய்வானையுடன் வெள்ளி இரதத்தில் அமர்ந்து முருகப் பெருமான் சுங்கைபட்டாணி நகரை வலம் வந்து இங்குள்ள பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

மாலை 7மணிக்கு மேல் தேவஸ்தானத்தை விட்டு வெள்ளி இரதம் புறப்படுவதற்கு முன்னதாக தேவஸ்தானத்திற்கு நன்கொடைகொடையாளர்கள், தேவஸ்தான அறங்காவலர்கள், தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தேவஸ்தானம் தனது நன்றியினைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்தது.


தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும் சுங்கைபட்டாணி தைப்பூசத்தில் வெள்ளி இரதத்தில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானை கண்டு தரிசப்பதற்கு பல லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
சுங்கைபட்டாணி நகரை வலம் வந்த முருகப் பெருமான் மறுநாள் காலைமணி 7..30க்கு தனது தேவஸ்தானத்தை வந்தடைந்தார்.

இந்த இரத ஊர்வலத்தில் குறிப்பாக மூன்று நாட்கள் தொடர்ந்து நிகழ்ந்த தைப்பூசத்தில் அதிகமான ஒத்தழைப்பினை காவல் துறையினர் மற்றும் ரேலா உறுப்பினர்கள் வழங்கி அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்துக் கொண்டனர்.

முருகப் பெருமான் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டபோது முருகப்பெருமானின் பக்தர்கள் பலர் ‘கந்த சஷ்டி’ கவசத்தை பாராயணம் செய்தவாறு இரத ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.

இரத ஊர்வலத்தின் நெடுகிலும் தண்ணீர்ப் பந்தல்கள் பக்தர்களுக்கு உணவுகளைகளையும் குடிநீர்ப் பானங்களையும் வழங்கி வந்தனர்.

குறிப்பாக முத்தையாஸ் கேஸ் என் கேரி, டோப் பிளாவர் ஶ்ரீ அம்பாள், மஇகா சுங்கைபட்டாணி தொகுதித் தலைவர் ஆர்.எஸ். தில்லை தலைமையில் இன்னும் கட்சிகளின் பந்தல்கள் மக்களுக்கு குறைவில்லாமல் இந்த சேவையினை செய்து வந்தனர்.

இதில் மிகப் பிரபலமான பந்தலை வடிவமைத்து பலரை அப்பந்தல் முன் நின்று ரசித்து வியக்கும் செல்லும் வகையில் தொழிலதிபரும் நன்கொடை நெஞ்சருமான ஶ்ரீ அம்பாள் பந்தல் அமைந்திருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles