

கோலாலம்பூர் பிப் 13-
என்னை நம்புங்கள், உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பேங்க் ராக்யாட் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற மலேசிய இந்தியர் கூட்டுறவு கழகங்கள் மாநாட்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு செய்தார்.
மேலும் இந்த
கூட்டுறவு கழக மாநாட்டில் கலந்து கொண்ட 200 இந்திய கூட்டுறவு கழகங்களுக்கு 30,000 வெள்ளி மானியம் வழங்கப்படும்.
இந்த 30,000 வெள்ளி மானியத்திற்கு முறையாக விண்ணப்பம் செய்யலாம் என்று டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.
100 ஆண்டுக்கால வரலாற்றில் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு நடத்தி மானியம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
அந்த வகையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டத்தோஸ்ரீ இரமணன் இன்று முதல் கட்டமாக இந்தியர் ஆறு கூட்டுறவு கழகங்களுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் 600 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
இதில் வேதனையான சம்பவம் என்னவென்றால் கூட்டுறவு கழக மாநாட்டில் கலந்து கொண்ட 200 இந்தியர் கூட்டுறவு கழகங்களில் 17 கூட்டுறவு கழகங்கள் மட்டுமே மானியத்திற்கு விண்ணப்பம் செய்தது பெரும் வேதனையை அளிக்கிறது என்று டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
30,000 வெள்ளி மானியத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. ஆனால் அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு எதுவுமே செய்ய வில்லை குறை கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த 30,000 வெள்ளி மானியத்தை எடுக்க வில்லை அது உங்களுக்குதான் இழப்பு.
இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த 30,000 வெள்ளி மானியத்திற்கு விண்ணப்பம் செய்து மானியத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

