நேசா உட்பட ஆறு இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு 1 லட்சத்து 75,000 வெள்ளி மானியம் வழங்கினார் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் !

செ.வே.முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் பிப் 13-
இந்நாட்டில் உள்ள இந்தியர் கூட்டுறவுக் கழகங்கள் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்ற இலக்கில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணன் இன்று ஆறு கூட்டுறவு கழகங்களுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

நாட்டிலுள்ள 16,000 கூட்டுறவுக் கழகங்களில் 419 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே இந்தியர்களால் வழி நடத்தப்படுகிறது.

அவற்றில் இந்தியர்கள் வசமுள்ள 419 கூட்டுறவு கழகங்களில் 2 லட்சத்து 49,599 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் நாட்டில் மொத்தம் 72 லட்சம் உறுப்பினர்களுடன் 16,000 கூட்டுறவு கழகங்கள் இருப்பதாக அவர் சொன்னார்.

அந்த வகையில் இந்தியர் கூட்டுறவு கழகங்கள் துடிப்புடன் செயல்படும் வகையில் இன்று ஆறு கூட்டுறவு கழகங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

Koparasi Nesa Pelbagai Berhad கழகத்திற்கு 30,000 வெள்ளி மானியம்,
Koparasi Guru -Guru Sekolah India Perak Berhad கழகத்திற்கு 30,000 வெள்ளி மானியம் , Koparasi Generasi Berwawasan Perak Berhad கழகத்திற்கு 30,
000 வெள்ளி மானியம், Koparasi India Salak Kuala Kangsar Berhad கழகத்திற்கு 30,000 வெள்ளி மானியம், Koparasi Serbaguna Kebangsaan Berhad கழகத்திற்கு 28,000 வெள்ளி மானியம் மற்றும் Koparasi Perniaga – Perniaga India Malaysia கழகத்திற்கு 27,600 வெள்ளி மானியம் நேரடியாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய கூட்டுறவு கழகங்கள் ஆணையத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ரோஸ்லி பின் ஜாபார் , துணை அமைச்சரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட ஆறு இந்தியர் கூட்டுறவு கழகங்களின் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles