
கோலாலம்பூர் பிப் 23
2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
பொதுமக்கள் அமைதி பேரணியை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, பேரணியின் ஏற்பாட்டாளர்கள் பேரணி நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்
பெர்னாமா

